❤•༆வாழ்வு வசந்தமானது༆•❤
பசியறிந்து சோறு போட ஒருவர் இருக்கும் வரை..
சாப்பிட்டாயா எனக் கேட்க ஒருவர் இருக்கும் வரை..
தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க ஒருவர் இருக்கும் வரை..
நோய் வந்தால் இரவுகளில் கண் விழித்துப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கும் வரை..
குரல் மாறுபாட்டில் மன நிலையைக் கணிக்க ஒருவர் இருக்கும் வரை..
போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என வழியனுப்ப ஒருவர் இருக்கும் வரை..
வீட்டைக் காத்திருந்து கதவு திறக்க ஒருவர் இருக்கும் வரை..
வாழ்வு வசந்தமானது!