AgaraMudhalvan
Epic Legend
தனித்திருந்தலின் போது
நிகழும் எண்ணவோட்டங்கள்
ஏராளம் அதில் ஏதோ ஒன்றை
ஆழமாக சிந்தித்து அதிலேயே லயித்து போவதும் அது குறித்து
கேள்விகள் ஆயிரம் எழுவதும்
வாடிக்கை தான்.
ஆனாலும்,
இந்த நிமிடங்கள்
பாரமாக தான் இருக்கிறது..
என்னுள்ளே புலம்புவதும்
பின் அதை நினைத்து தவிப்பதும்
தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது...