AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆முத்தங்கள்༆•❤꧂

காதல் பாதி
காமம் பாதி
கலந்து செய்த கலவைகள்
"முத்தங்கள்.....
"முத்த" கப்பல்களை
சரியான திசை காட்டி
கரையேற்றி விடுவது
மூக்குத்தி என்னும்
கலங்கரை விளக்கங்கள்.....
நெற்றியில் இறங்கி
உதடுகளுக்குள் சங்கமித்து
மனதிற்குள் கரையும்
ரகசிய ஊற்றுகள்
"முத்தங்கள்".....
மேகங்கள் உரசிக்கொண்டால்
இடி மின்னல் மழை
"முத்தங்களின்"
வளர்ப்பு குழந்தைகள் அவை......
கணக்கிட முடியாத
நட்சத்திர கூட்டங்களில்
ஒளிந்திருப்பது
எத்தனை கோடி
பறக்கும் "முத்தங்களோ!!"
கலோரிகள் குறைப்பதற்கு
அதிகம் மெனக்கெட வேண்டாம்
உடற்பயிற்சி கூடங்கள்
தேடியலைய வேண்டாம்
"முத்த" முயற்சிகள் போதும்.....
நீ அலை- நான் கரை
நான் அப்படியே தான் இருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
"முத்தமிட்டு" விட்டு
வெட்கக்கடல் நோக்கி
ஓடி விடுகிறாய்.....
காதலின்
ஆதியும் அந்தமும்
மொத்தமும்
"முத்தம்" தான்.....
Expiry date இல்லாத
ஒரே வஸ்து
"முத்தமென்னும்"
பெருங்கடவுள்.....
கிழக்கும் மேற்கும்
வடக்கும் தெற்கும்
அனைத்தும்
"முத்தத்திற்கே" உரியன.....