AgaraMudhalvan
Epic Legend
ஒரு கைவிடுதல்
நிகழும்போது தான்
மிகச்சரியாக இன்னொரு
உறவு அருகே வருகிறது...
வார்த்தைகளை
எத்தனை கவனமாகக்
கையாளும்போதும்
ஏதோவொரு கீறல்...
இயல்பாக பேசும்மொழி
எப்போது தடுமாறுகிறதோ
அங்கே ஒரு அச்சஉணர்வு
தலைதூக்கி விடுகிறது...
சகலத்தையும் ஒருபாடாய்
உதறியெழும் மனம் தான்
கூப்பாடு போடுகிறது
யாருமற்று உன்னால்
வாழமுடியாதா என்ன...
சிரித்துக்கொண்டே
பதில் சொல்லி வைக்கிறேன்
எல்லோரும் இருக்கிறார்கள்
என்று நான் மட்டும் தானே
நம்பிக்கொண்டிருக்கிறேன்!!!
Last edited: