உன் அழைப்புகளை உடனே ஏற்பதில்லை...
நீ காட்டும் அன்பிற்கு பதில் அன்பு தருவது இல்லை..
உன் குறுஞ்செய்திகளை படித்தாலும் பதில் அனுப்புவதில்லை
நீ தாங்குவது போல நான் உன்னை தாங்குவது இல்லை...
நீ கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சிறு அளவு கூட நான் தருவதில்லை
அதற்கெல்லாம் உன்னை பிடிக்கவில்லை என்ற பொருளில்லை...
உன்னிடம் இன்று கிடைக்கும் அத்தனையும்...
அதற்கு மேலும்....
கொட்டி கொட்டி கொடுத்து தேய்ந்த கூழாங்கல் நான்....
என் முக்கியத்துவங்களை பெற்றவர்கள்..
என் அன்பை அனுபவித்தவர்கள்..
என் தவிப்பை எள்ளி நகையாடியவர்கள்...
என் காத்திருப்பை கவனத்தில் கொள்ளாதவர்கள் கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட கருங்கல் நான்....
உன் கைகளில் கூலாங்கல்லாய்
அழகாக தெரிகிறேன்...
அவ்வளவு தான் என் இருப்பு....!