❤•༆என்னடி ஆச்சு உனக்கு༆•❤
என்னடி ஆச்சு உனக்கு
என்கிறான்...
உன் மேல் பித்தாச்சு என்றால் நம்பவா போகிறான்...
முடியாது போடி என்கிறான்...
முடித்துவிட்டு
முடியாது என பாசாங்கு செய்யும் மாயக்கண்ணன் அவனே...
போடி லூசு என்கிறான்....
லூசாகி போனதாலேயே
அவனை டைட்டாய் பிடித்துக் கொண்டேன்...
உன்னை
நினைக்கையில்
எல்லாம்
எழும் சிலிர்ப்பை
என்ன தான் செய்ய..
நினைக்காமல் இருக்க
எனை நீங்காமல் தான் இரேன்....
சரியாக
குளித்தால்
எங்கே கரைந்து விடுவாயோ
என்றே
அழுக்கு அகலாமல்
காக்காய் குளியல் குளிக்க பழகினேன்...
நீ உறங்கிய
இடத்தில்
நான் உறங்கி
எழுந்த போது தான் உணர்ந்தேன்
என்னு
ள் நீ ஒட்டிக்கொண்டிருப்பதை...
