꧁❤•༆எனக்கு தெரியல༆•❤꧂
முதல் முத்தம் தான்
எப்படி இருந்ததோ நானறியேன்.
ஏதும் சொல்லவில்லை
என்னவென்று புரியவில்லை.
வினவினாலும் பதிலில்லை
வினவியதைத் தவிர்த்தது கண்டேன்.
தவிப்பா இல்லை தவிர்ப்பா
என்றொரு வினா இன்னுமெனக்குள்.
விடை தேடும் முன்னரே
கனவு வழிகள் திறந்துவிட்டன.
அதரங்களால் அளந்த கதை
எவ்வாறென நாளை கேட்கிறேன்.
அப்போதாகிலும் வேண்டி
நின்று ஆட்கொள்வேன் நானும்.
நீ வருவாய் என.