꧁❤•༆இல்லை இல்லை இல்லை༆•❤꧂
ஏன் பிடிக்கும் என்றால்
காரணமே இல்லை.
எவ்வளவு பிடிக்கும் என்றால்
அளவே இல்லை.
இப்படியே தொடருமா என்றால்
அதற்கேதும் பதிலில்லை.
சரி.. போதும் விலகலாம் என்றால்
துளிக்கண்ணீரைத்
தவிர வேறேதும்
வார்த்தைகள் இல்லை.
எப்போதும்
இப்படித்தான்.
விட்டு விலகி வாழவும்
முடியாமல் தொட்டுத்தொடர்ந்து
சாகவும் இயலாமல்
வதைசெய்து வதம் செய்து
மெல்லமெல்ல
கொன்றுக்கொண்டிருக்கும்
ஒன்றிக்குத் தானே இங்கு
நேசமென்று


என்றும் பெயர்.