꧁❤•༆இதயத் திருடி༆•❤꧂
தன்
துணை
தேடி
சுவர் பல்லி
அழைக்கும்
ஓசை
கேட்டிடும் போது
நீ....என்னை
நினைப்பதாகவும்...!!!
விழித்தெழுகையில்
துடித்திடும்
இடதுகண்
அசைவிற்கு
நீ....என்னை
தேடி
வருவதாகவும்
நினைத்துக்
கொள்கிறேன்...!!!
சில
அசட்டு
நம்பிக்கைகள்
பொய்களை
கடந்தும்
இனிக்கவே
செய்கின்றன...!!
ஆயினும்
எனது
அன்பு
எப்பொழுதும்
மெய்யெனக்கொள்வாயாக
என் அன்பே....!!!!