AgaraMudhalvan
Epic Legend
அன்பையும் ஆசையும் சேர்த்துக்கொண்டு போதாதென்று இது
வாழ நம்பிக்கையை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும்.
வாங்க போங்க என்று ஆரம்பித்து நாயே பேயே என்று கொஞ்ச சொல்லும்.

ஒரே இன்ச் சுற்றளவு கொண்ட
விழியை உலகமென்று நம்ப
வைக்கும்.
ஒரு பெயர்தான் அது நாய்க்கு
இருந்தாலும் ஆசையோடு
பார்க்கச் சொல்லும்.

கிறுக்குத்தனங்களை செய்யச்
சொல்லி கள்ளத்தனங்களை
ரசிக்க வைக்கும்.
குட்நைட் சொல்லி
அலைபேசயில் ஆரம்பித்து
குட் மார்னிங் சொல்லி தூங்கப் போகும்.

காத்திருக்கும் காத்திருப்பது
சுகமென்று பொய்யை
மெய்யாகவே சொல்ல வைக்கும்.
எதிர்பார்ப்புகளை வளர்ப்பதில் போட்டி போட்டு ஏமாற்றத்தை தாங்க பயிற்சியை கொடுக்கும்.

கோபத்தையும் ரசிப்பதாக சொல்லி ஆழ்மனதை
சமாதானப்படுத்தும்.
தன்மானத்தை தூக்கிப்போட்டு
அன்பிற்கு அடிமை என்று
மோடி வித்தை காட்டும்.

இத்தனைக்கு பிறகும் அது
காதலிக்கப்பட்டால் அது
புரிதலுக்கு கிடைத்த பரிசாக
நினைக்காமல் தான்
இல்லையென்றால் உலகமே
இல்லையென்று பொய்
பிரச்சாரம் செய்யும்
பாருங்கள் அது ஆகச்சிறந்த
கவிதையாக எல்லோரையும்
கவர்ந்துவிடும்.

வாழ நம்பிக்கையை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும்.
வாங்க போங்க என்று ஆரம்பித்து நாயே பேயே என்று கொஞ்ச சொல்லும்.

ஒரே இன்ச் சுற்றளவு கொண்ட
விழியை உலகமென்று நம்ப
வைக்கும்.
ஒரு பெயர்தான் அது நாய்க்கு
இருந்தாலும் ஆசையோடு
பார்க்கச் சொல்லும்.

கிறுக்குத்தனங்களை செய்யச்
சொல்லி கள்ளத்தனங்களை
ரசிக்க வைக்கும்.
குட்நைட் சொல்லி
அலைபேசயில் ஆரம்பித்து
குட் மார்னிங் சொல்லி தூங்கப் போகும்.

காத்திருக்கும் காத்திருப்பது
சுகமென்று பொய்யை
மெய்யாகவே சொல்ல வைக்கும்.
எதிர்பார்ப்புகளை வளர்ப்பதில் போட்டி போட்டு ஏமாற்றத்தை தாங்க பயிற்சியை கொடுக்கும்.

கோபத்தையும் ரசிப்பதாக சொல்லி ஆழ்மனதை
சமாதானப்படுத்தும்.
தன்மானத்தை தூக்கிப்போட்டு
அன்பிற்கு அடிமை என்று
மோடி வித்தை காட்டும்.

இத்தனைக்கு பிறகும் அது
காதலிக்கப்பட்டால் அது
புரிதலுக்கு கிடைத்த பரிசாக
நினைக்காமல் தான்
இல்லையென்றால் உலகமே
இல்லையென்று பொய்
பிரச்சாரம் செய்யும்
பாருங்கள் அது ஆகச்சிறந்த
கவிதையாக எல்லோரையும்
கவர்ந்துவிடும்.

Last edited: