
நிஜம் !! என்றெண்ணி
நிழல் !! பிம்பம் தரித்திருந்தேன்...
அருகிருந்தும் தொலைந்தவளை
அறிந்தபின் தகர்த்தெறிந்தேன்...
ஊரார் எவரும்
உடன் வராதிருக்க
உனக்காகவும் வாழ்ந்து பார் !!!
உன் மனமே
உனை ரசிக்கும்...

கல்லாகிய
காதலால் கரைத்தவளே ...
களர் நிலத்திலும் !!
கதிர் !! அருக்க
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்...



