வைரமுத்து
_______________
"ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்ததென்ன!" - நறுமுகையே (இருவர்)
"நீ அணைக்கின்ற போதிலே
உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்." - புதுவெள்ளை மழை (ரோஜா)
"தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே" - (இந்திரா )
"ஒரு விரல் மெல்லத் தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா" - நூறாண்டுக்கு ஒரு முறை (தாயின்மணிக்கொடி)
"ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ,
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ." - தீண்டாய் மெய் தீண்டாய் (என் சுவாசக் காற்றே)
இதனை பா.விஜய்
"தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன" (துள்ளுவதோ இளமை) என்றார்.
"தீண்டித் தீண்டித் தீயை மூட்டுகிறாய்" (பாலா) இது அறிவுமதி.
அதுவே நா.முத்துக்குமார் பார்த்த கோணம் வேறு. தொடுவதற்குத் தவித்தல். தொடாதிருப்பதின் அவஸ்தையாக அவர் எழுதினார்
"தொடாமலே
ஒரு தீ எரியுதே
விடாமலே உள்ளே
கை படாமலே
ஒரு போதை ஏறுதே
நினைவுகள் சுடுதே" (காதல் கொண்டேன் )
சரி! இது எல்லாத்துக்கும் அப்பன் ஒருத்தன் இருக்கான் அவன் யார் தெரியுமா?
"தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்" - கண்ணதாசன். (தர்மம் தலைகாக்கும்)
இந்தப் பாடல் வந்த மறுவருடம் இதனை கவிஞர் வாலி அப்படியே எதிர்பதமாக ஒரு பாடல் எழுதினார்.
"தொட்டால் பூமலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்" (படகோட்டி)