விழிகளில் உனது
இரு விழிகளில்
யார் காட்டினார்
கண்களில்
கவிதை
பேசினார்
கருவிழிகளில்
கண் இமைகளை
யார் காட்டினார்
பார்வையில்
மொழியை
பேசினார்

மௌனங்கள் தொடர்ந்து போகுதே
கண்களின் அழகை ரசிப்பதால்
கவிதைகள் எழுத தோணுதே
உன் இமைகளை பார்க்கும் போதெல்லாம்
உன் இதயத்தால் என் சிறு
இதயத்தை
பூட்டி வைத்ததார்
இருவிழி இதழ் இமைகளை
காணும் எந்தன்நிலா
என்னோடு சேர்த்து வைத்ததார்
மனங்களில் இருஉயிர்கள் சேருதே
உன்னோடு சேர்த்து வைத்ததார்
உந்தன் அழகை கண்டு
வார்த்தை கூச்சங்கொண்டு
எழுதா ஓர் கவிதை நீ
மனதில் காதல் கொண்டு
மனமே ஏங்கி கொண்டு
முடியா காதல் நீ

உயிரே இல்லாத ஓவியங்கள்
உன்னை பார்த்து காதலுறும்
உயிரே இல்லாத எண்ணங்களும்
மோகம் கொள்ளும்
உன் மீது நேசம்
கொண்ட
நானும் தான் என்ன
ஆவது
இருவிழி இதழ் இமைகளை
காணும் எந்தன்நிலா
என்னோடு சேர்த்து வைத்ததார்
மனங்களில் இருஉயிர்கள் சேருதே
உன்னோடு சேர்த்து வைத்ததார்

கவியால் பாடி கொண்டும்
நினைவால் உருக வைத்தும்
எழிழால் என்னை ஈர்க்கிறாய்
இமையின் அழகை
கொண்டு
உதட்டின் சாரல்மழையில்
பொழிவால் அன்பை கொள்கிறாய்
அழகே உன்னோடு கைகோர்க்க
ஆணையிடு
மூச்சே நின்றாலும் கைகள்
இறுக பற்றி கொள்ளும்
உன்னோடு சேர்ந்து வாழ
ஏழு கோடி ஜென்மம் வேண்டுமே
இருவிழி இதழ் இமைகளை
காணும் எந்தன்நிலா
என்னோடு சேர்த்து வைத்ததார்
மனங்களில் இருஉயிர்கள் சேருதே
உன்னோடு சேர்த்து வைத்ததார்
