♥️MINSAARAKKANNAA♥️
Newbie
ஒரு இறுகிய நேசத்துக்காக கைகளில் நானே விலங்கிட்டுக்கொண்டேன்,
முட்டாள் என நம்பிக்கொண்டிருந்திருக்கிறாய்,
விலகுவது வலிக்கும் என வலியும் சுமந்தேன்,
அப்போதும் மதிக்கப்படாத ஒரு அன்பிற்காய்
மண்டியிட்டுக்கிடப்பது,
என்மேல் எனக்கே நம்பிக்கையை
இழக்கவைத்துவிட்டது.
வேறு வழியின்றி,
வலிக்கவே விலகவேண்டியதாயிற்று
காலங்களின் பிடியில் நான் உனக்கு ஒரு கடந்தகாலம்தான்
ஆனால் எனக்கு
ஒரு உறவின்மீதான கடைசிநம்பிக்கையின்
முற்றுப்புள்ளி.
அவ்வளவு தான்…
அவ்வளவும் தான்.