ஆண்களின் PSYCHOLOGY பற்றி பெண்கள் அறிந்து வைக்க வேண்டிய மிக முக்கியமான குறிப்புகள்
ஆணை நீங்கள் எப்போதும் உங்கள் அன்புப் பார்வையால் மாத்திரம் பார்க்கப் பழகாதீர்கள். அவனை நீங்கள் அவனது அறிவின் இயல்பின் படியும் பார்க்கப் பழகுங்கள்.
ஆணின் இயல்பையும் சுபாவத்தையும் நீங்கள் கற்று வைத்துக்கொள்ளுங்கள்.
அதன் மூலம் நீங்கள் "அவனை மாற்ற முடியாதே, அவனை திருத்த முடியாதே" என அனாவசியமாக அங்கலாயந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது.
️ஆண் எப்போதும் தனது குடும்பம் பிள்ளைகுட்டிளை விட தனது தொழில் துறவுகளில்தான் கூடுதல் கவனம் செலுத்துவான். காரணம், ஆணுக்கு அவனது தொழில்தான் மூலதனம், அதனை அவன் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சாதனமாகவும் கருதுகிறான்.
ஆதலால் அவன் எப்போதும் வேலையில் BUSY ஆக இருக்கிறான் என்பதாக அவன் மீது குற்றம் சாட்டாதீர்கள், உங்களுடனும் உங்கள் குழந்தைகளுடனும் கழிக்க குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
ஆண் பெரும்பாலும் பெரும் தவறுகளை செய்யாத வரை நேரடியாக உங்களிடம் மன்னிப்புக் கேட்கவே மாட்டான்.
ஆதலால் நாளாந்தம் வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகளுக்கு அவன் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். காரணம், அவன் அவைகளை ஒரு விவகாரமாகவே பார்க்க மாட்டான்.
சில ஆண்கள் செயல்வீரர்களாக மாத்திரம் இருப்பார்கள். அதாவது நடத்தையில் மாத்திரம் அன்பை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் காதலாக பேச, உரையாட கூச்சப்படுவார்கள். ஆனால் உங்கள் சகல விதமான தேவைகளையும் அவர்கள் நிறைவேற்றி வைப்பதில் கவனமாக இருப்பார்கள்.
சில பெண்கள் அதற்கு மாற்றாக இருப்பார்கள். அவர்கள் ரொமென்டிக்கான வாழ்வையும், இனிமையான காதல் வார்த்தைகளையும் கேட்பதில் அதீத ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
இதுபோன்ற வெவ்வேறான ஜோடிகள் ஒன்றிணையும் போது குடும்பப் பிரச்சினைகள் மூழ்கின்றன.
️சில ஆண்கள் சொல்வீரர்களாக இருப்பார்கள், அவர்கள் அன்பாக பேசுவதில் வல்லவர்கள், பேச்சில் திறமையான காதல் மன்னவர்களாக இருப்பார்கள். நிஜ வாழ்வில் அது இல்லாமல் இருக்கும், அல்லது மிகவும் குறைவாக இருக்கும்.
சில பெண்கள் இதற்கு மாற்றாக இருப்பார்கள். அவர்கள் நடத்தையில் அன்பை எதிர்பார்ப்பார்கள். சொல்லை விட செயலில் எல்லாம் சரியாக இருந்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் இருப்பார்கள்.
இப்படிப்பட்ட ஜோடிகள் ஒன்றிணையும் போதும் குடும்பப் பிரச்சினைகள் மூழ்கின்றன.
️ஆணை நீங்கள் ஒரு போதும் அதீத கவனம் செலுத்திப் பார்க்க முயலாதீர்கள், அதனால் அவன் மூச்சித் திணறி செத்துவிடுவான். அவனை நீங்கள் மொத்தமாக உதாசீனமும் செய்யாதீர்கள், அதனால் அவன் வேறு பெண்கள் மீது மோகம் கொள்ள ஆரம்பிப்பான்.
அதற்கும் இதற்கும் மத்தியில் சமமாக இருந்து அவனை கவனித்துக் கொள்ளுங்கள்.
ஆண் ஒரு போதும் நீங்கள் குரலை உயர்த்திப் பேசுவதை விரும்ப மாட்டான். ️
அற்பமான பிரச்சனைகளுக்காக முகத்தை சிடுசிடுப்பதையும் விரும்பமாட்டான்.
நீங்கள் உலக அழகு ராணியாக இருந்தாலும் கூட இத்தகைய நடத்தைகள் உங்களை அவன் முழுமையாக வெறுக்கக் காரணமாகிவிடும்.
️ஆணை நீங்கள் உங்கள் முழுக் கட்டுப்பாட்டிலும் வைக்க முனையாதீர்கள். அதாவது அவனே வீட்டில் அடைத்து வைக்க முற்படாதீர்கள். அவனுக்கென்றே உள்ள அவனது சுதந்திர உலகிலும் இருக்க விட்டுவிடுங்கள்.