மன அழுத்தத்தில் தூக்கம் கலைகிறது
வெறுக்க வேண்டுமென்று
முடிவெடுத்தவர்கள் அதற்கான காரணங்களை தனக்கு சாதகமான நியாயங்களில்
வைத்துக் கொள்கிறார்கள்.
நமக்கு தெரிய கூடாதென்ற
ஏதோ ஒரு மறைமுகமான முன்னேற்றத்திற்கு நாம் இடஞ்சலாக இருப்போமோ என்ற எண்ணங்கள் கூட சமயத்தில் பிரதானமாக அமைந்து விடுகிறது.
ஒருவரை நிறைய ஆராய்ந்தால்
அவர்களுடனான நம்முடைய எதிர்கால பயணங்கள் நிம்மதியின்மையில் பயணிக்கிறது.
காலத்தினால் அழிக்க முடியாத
மறக்க முடியாத நம்பிக்கை துரோகங்களை பிறர் மூலம் அரங்கேற்றி விட்டு தன்
சுய நலத்தில் வாழ்ந்து கொள்கிறார்கள்.
கழுத்தை அறுப்பவன் போடும்
புட்களை தின்றுவிட்டு அறுபட காத்திருக்கும் ஆடு போல் காத்திருக்கிறோம்... பதற்றமாக...
மீண்டும் மீண்டும் அவர்களை சந்திக்கும் கொடூரமான சூழலை காலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அறியப்பட்ட வாழ்வியல்
குழப்பங்களை மறதியில்
வைத்திருப்பதில்லை மனது.