

அன்பே என்
அன்பே உன் விழி
பார்க்க இத்தனை
நாளாய் தவித்தேன் !!!
கனவே கனவே கண்
உறங்காமல் உலகம்
முழுதாய் மறந்தேன் !!!
கண்ணில் சுடும் வெயில்
காலம் உன் நெஞ்சில்
குளிர் பனிக்காலம் அன்பில்
அடை மழைக்காலம் இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம் !!!
நீ நீ ஒரு நதி
அலை ஆனாய் நான்
நான் அதில் விழும்
இலை ஆனேன் உந்தன்
மடியினில் மிதந்திடுவேனோ !!!
உந்தன் கரை தொட
பிழைத்திடுவேனோ ஓ
மழையினிலே பிறக்கும்
நதி கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம்
மெளனத்திலே கலக்கும் !!!
நீ நீ புது கட்டளைகள்
விதிக்க நான் நான் உடன்
கட்டுப்பட்டு நடக்க இந்த
உலகத்தை ஜெயித்திடுவேன !!!
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
எதைக் கொடுத்தோம் எதை
எடுத்தோம் தெரியவில்லை
கணக்கு எங்கு தொலைந்தோம்
எங்கு கிடைத்தோம் புரியவில்லை நமக்கு !!!