


நான் அவள் இல்லை

அழகிலும் குணத்திலும் எதிலும்
நான் அவள் இல்லை

உன் மேலே காதல் கொண்டேன் உன் வானத்தில் இரண்டாம்
நிலவாய் என்னை பூக்க
செய்வாயா செய்வாயா

அவள் எங்கே
விட்டுப் போனாளோ
அங்கே தொடங்கி உன்னை
நான் காதல் செய்வேனே

என் வானிலே
ஒரு முகிலாய் நீ
தோன்றினாய் மெதுவாக
என் வானமாய் விரிந்தாயடி
என் நெஞ்சிலே

என் பூமியில்
ஒரு செடியாய் பூ
நீட்டினாய் மெதுவாக
நீ காடென படர்ந்தாயடி
என் நெஞ்சிலே

உன்னாலே விழியோடு சிரிக்கின்றேன் மீண்டும் இன்று உன்னாலே என்னை மீண்டும் திறந்தேன் பெண்ணே
