
ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மாா்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல
வாா்த்தை தேடுதே !!!
கண்ணெல்லாம்
நீயேதான் நிற்கின்றாய்
விழியின்மேல் நான்
கோபம் கொண்டேன்
இமை மூடிடு என்றேன் !!!
நகரும் நொடிகள்
கசையடிப் போலே முதுகின்
மேலே விழுவதினாலே
வாி வாிக் கவிதை எழுதும்
வலிகள் எழுதா மொழிகள் எனது !!!
ஏன் அதில் தோற்றேன் ஏன் முதல் முத்தம் தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது !!!
தேகம் தடை இல்லை
என நானும் ஒரு வாா்த்தை
சொல்கின்றேன் ஆனால் அது
பொய் தான் என நீயும் அறிவாய்
என்கின்றேன் அருகினில் வா !!!
தள்ளிப் போகாதே
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே இருவர் இதழும்
மலா் எனும் முள்தானே !!!