

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் !!!
இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க தன்னிடம் கற்பனை தீர்ந்ததை எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான் !!!
ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து மார்பு கடந்து இறங்கும் பொழுது முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே !!!
நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து பாலில் நனைத்து பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டார் !!!
உலக மலர்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்ணை சமைத்து விட்டார் !!!
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா !!!