நீ விட்டுச் சென்ற பிறகு
இதயத்தில் எந்த வலியும்
இல்லை!..
உன்னைப் பற்றிய
நினைவுகளும் இல்லை!..
எந்த ஒரு போராட்டமும் இன்றி
மிக இயல்பாகத்தான் கடக்கிறது
என் ஒவ்வொரு நொடி முள்ளும்..
இதை இப்படியே ஏற்றுக்கொள்
இதற்கு மேல் பொய்
சொல்லத் தெரியாதெனக்கு...
அடக்கி வைத்த சிறகுகளை
விரித்துப் பறக்கத்தானே கூண்டுப்
பறவையின் அத்தனை
காத்திருப்புக்களும்..
உன் நினைவுகள் மட்டும் என்ன
விதிவிலக்கா என்ன....

Reactions: SugarLlips and GameChangeR