゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
அதிகாலை மூன்று மணிதூக்கம் விழிக்கிறேன்
ஊரெங்கும் நிசப்தம்
என் அறையின்
மின் விசிறி ஓயாமல்
புலம்பிக் கொண்டிருந்தது
கடிகார முட்கள்
மெல்லிய ஓசையோடு
காலத்தை சிரமப்பட்டு
நகர்த்திக் கொண்டிருந்தது
இருளின் சங்கிலியால்
நான் பிணைக்கப்பட்டிருந்தேன்
தூக்கம் கலைந்ததும்
எண்ணங்களில்
என் கடமைகள்
துளிர் விட்டு இருந்தன
அதன் நடுவே
உன் நினைவுகள்
எனும் மொட்டுகள்
அழகாக பூக்கத் தொடங்கின
மெல்லப் புலர்கிறது
என் வானம்.
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚









நீ தான் என் உலகம் என்பதாலும்
என் உலகமே நீ என்பதாலும்..
சூப்பர் குட் நைட்

Reactions: AgaraMudhalvan