• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

நேசிப்பதும் யோசிப்பதும் அவளைத்தான்

Krish_Kishore

Wellknown Ace
என் சுவாசக் காற்றின் அதிர்வெண்ணும் அவள் பெயரே!
அவள் நினைவிலே மூழ்கிய இந்த நாளிதினில்,
நான் என்னை நானே அறிந்திருக்க மாட்டேன்!
சுயத்தைத் தொலைத்து, உன் நிழலில் கரைந்து,
நானே எனக்குப் புது முகவரியாய் மாறுகிறேன்!
என் இதயத் துடிப்பின் தாளங்கள் யாவும்
இப்போது உன் மெல்லிய சிரிப்பிற்குள் அடங்கின!
எல்லைகள் கடந்த இந்த மௌனப் பயணத்திலே
அவளாய் மாறிய பின்பே, நான் முழுமையானேன்!

Dedicated to @Hangova
 
கடலின் ஓசை தான் மாறுமா?
காதல் வாசம் தடுமாறுமா
நினைவுக்குள் நெருக்கங்கள் நீளுமா,
காற்றின் இசையில் மௌனங்கள் பேசினால் உயிர் தாங்குமா!
மென்மையாய் தீண்டும் மழை போல
சில மௌனங்களின் சிதறல்
உயிர் கொல்லும்.
பல யுகங்கள் தாண்டியும் சில அணுக்கள்
கவிதை பாடும்!
 
Top