♥️MINSAARAKKANNAA♥️
Newbie
எல்லாம் நன்றாகத்தான்
போகின்றன
பொழுது அதன்பாட்டில்
விடிகின்றது
நாளுக்கான அவசரங்கள்
எப்போதும்போல தொடர்கின்றன
நண்பர்களுடனான அரட்டைகள்
புன்னகை தவழும் புகைப்படங்கள்
கண்ணாடி முன்னான ஒப்பனைகள்
அவ்வப்போதைய பயணங்கள்
ருசியான உணவுகள்
என எதிலும்
குறைவில்லை
பின்னும்
இரவினில் உறக்கம் கெட்டு
எழவில்லை
எதையோ நினைத்தப்படி
வானம் பார்த்து அமர்ந்திருக்கவில்லை
சாலையோர கடைகளில் ஏதோவொரு பெயர்ப்பலகையைப் படித்து
வேர்ப்பிடித்து அங்கேயே
நிற்கவில்லை
ஏதோ ஒரு குழந்தையில்
எவருடையதோ ஒரு சாயலைக்கண்டு
அள்ளியெடுத்து முத்தமிட்டுத் திரும்பவில்லை
ஆம்
எல்லாம் நன்றாகத்தான்
போகின்றன
உண்மையில்
யார் இல்லாமல்
நம் உலகமே தலைகீழாகி விடுமென
அஞ்சி அழுதோமோ
யாரை நீங்கினால்
நம் வாழ்வே
அர்த்தமற்றதாகி விடுமென
எண்ணி பயந்தோமோ
அவர்களைப்
பாதி வழியில்
தொலைத்து விட்டுத்தான்
சகஜமாய்
நாமிங்கு
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
இல்லையா
எனில்
நம் பிரியங்கள்,
வாக்குறுதிகள்,
பிடிவாதங்கள்,
அச்சங்கள்,
என எல்லாமே
அந்தந்த நேரத்துத்
தோற்ற மயக்கங்களா
என்ன
இல்லை
சமயங்களில்
காலம்
கடந்ததெதையும் திரும்பிப்பார்க்க
நம்மை
அனுமதிப்பதேயில்லை
அது
அப்படித்தான்
வாழ்வதற்காய்
மறந்துபோகிறோம்
மறந்ததனாலேயே
நாமின்னும் உயிர்த்திருக்கிறோம்....!
போகின்றன
பொழுது அதன்பாட்டில்
விடிகின்றது
நாளுக்கான அவசரங்கள்
எப்போதும்போல தொடர்கின்றன
நண்பர்களுடனான அரட்டைகள்
புன்னகை தவழும் புகைப்படங்கள்
கண்ணாடி முன்னான ஒப்பனைகள்
அவ்வப்போதைய பயணங்கள்
ருசியான உணவுகள்
என எதிலும்
குறைவில்லை
பின்னும்
இரவினில் உறக்கம் கெட்டு
எழவில்லை
எதையோ நினைத்தப்படி
வானம் பார்த்து அமர்ந்திருக்கவில்லை
சாலையோர கடைகளில் ஏதோவொரு பெயர்ப்பலகையைப் படித்து
வேர்ப்பிடித்து அங்கேயே
நிற்கவில்லை
ஏதோ ஒரு குழந்தையில்
எவருடையதோ ஒரு சாயலைக்கண்டு
அள்ளியெடுத்து முத்தமிட்டுத் திரும்பவில்லை
ஆம்
எல்லாம் நன்றாகத்தான்
போகின்றன
உண்மையில்
யார் இல்லாமல்
நம் உலகமே தலைகீழாகி விடுமென
அஞ்சி அழுதோமோ
யாரை நீங்கினால்
நம் வாழ்வே
அர்த்தமற்றதாகி விடுமென
எண்ணி பயந்தோமோ
அவர்களைப்
பாதி வழியில்
தொலைத்து விட்டுத்தான்
சகஜமாய்
நாமிங்கு
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
இல்லையா
எனில்
நம் பிரியங்கள்,
வாக்குறுதிகள்,
பிடிவாதங்கள்,
அச்சங்கள்,
என எல்லாமே
அந்தந்த நேரத்துத்
தோற்ற மயக்கங்களா
என்ன
இல்லை
சமயங்களில்
காலம்
கடந்ததெதையும் திரும்பிப்பார்க்க
நம்மை
அனுமதிப்பதேயில்லை
அது
அப்படித்தான்
வாழ்வதற்காய்
மறந்துபோகிறோம்
மறந்ததனாலேயே
நாமின்னும் உயிர்த்திருக்கிறோம்....!
