• Hello People, The Chat Room is Still Under Development , So please bare with the time.We are trying to make it the best.-Team ZoZo

ஏகாந்த வேளை !

Shady

Active Member
தனிமையை நாடினேன் ,
தேவதை அவளில்லா நாட்களில் . . .
எனக்குள்ளே பேசினேன் ,
என்னவள் நினைவுகளில் . . .
ஏதேதோ எழுதினேன் ஏகாந்த வேளையில் . . .
காதலும் கூடிப்போக ,
காத்திருந்தேன் ! ஏக்கத்தில் . . .

அவளில்லா நாட்களில் ,
குருஞ்செய்திகளே அவள் குரலாக
கண்முன் அவள் பூமுகம் மட்டுமே நிழலாக
காணும் யாவிலும் அவள் பிம்பம் தெளிவாக . . . .

கார்மேகம் கண்டேன்
அவள் கார்குழலோ என்று !
தென்றலை உணர்ந்தேன்
அவள் சுவாசமோ என்று !
மயிலொன்று கண்டேன்
மங்கை அவள் தேகமோ என்று !
கவி யாவும் கேட்டேன்
பேதை அவள் பேசும் மொழியோ என்று !
தேனும் சுவைத்தேன்
தேவதையின் பூவிதழோ என்று !

ஏகாந்த வேளைகளில் என்னுள் அவள் மட்டும்
 

Pinkcandy

Moderator
Staff member
Moderator
Yeah avlo azhagana vaarthai irukkum!! Like even to jus say it loud - Takkunu I get Kottravai, Paavai
 
Top